Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்ச் 2021 - எண்ணியல் பலன்கள்: 5, 14, 23

Advertiesment
மார்ச் 2021 - எண்ணியல் பலன்கள்: 5, 14, 23
, செவ்வாய், 2 மார்ச் 2021 (15:00 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
சாமர்த்தியமாக திட்டமிட்டு எதிலும் ஈடுபடும் ஐந்தாம் எண் வாசகர்களே தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில்  வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம்  லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள்.

கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள். எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத  செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம்.

பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. 
 
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அர்ப்பணித்து வழிபடவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ச் 2021 - எண்ணியல் பலன்கள்: 4, 13, 22, 31