Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7,16,25

Advertiesment
ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7,16,25
, செவ்வாய், 31 மே 2016 (19:04 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் உங்களின் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். திருமணம் முயற்சிகள் கூடி வரும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும். குழந்தை பாக்யம் உண்டாகும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். புது சொத்து வாங்குவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை அடைவீர்கள். லோன் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக் கொள்வார்கள். 
 
வாகனப் பழுதை சரி செய்வீர்கள். பிரியமானவர்களை சந்திப்பீர்கள். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து வயிற்று வலி, காய்ச்சல், டென்ஷன் வந்துப் போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். 
 
அரசியல்வாதிகளே! கட்சியில் மதிக்கப்படுவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பெற்றோர் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் ஆதாயம் சுமாராகத் தான் இருக்கும். தேங்கிக் கிடக்கும் சரக்குகளை, சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல் போக்கு விலகும். சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். 
 
கலைத்துறையினரே! உங்களின் கலைத் திறன் வளரும். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். தன்னம்பிக்கையால் வெல்லும் மாதமிது.   
 
அதிஷ்ட தேதிகள்: 7, 2, 6, 11, 20
அதிஷ்ட எண்கள்: 5, 7
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, பிங்க்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24