5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். தடைகள் நீங்கும். அரசாங்கத்தால் ஆதாயமுண்டு. வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள் என்றாலும் வீண் வாக்குவாதம், மனக்கவலை, முன்கோபம் வந்துச் செல்லும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும்.
பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களுடன் பழகும் உறவினர், நண்பர்களின் பலம், பலவீனம் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களிடையே கருத்து மோதல்கள் வரக்கூடும்.
அரசியல்வாதிகளே! பெரிய பொறுப்புகள், பதவிகள் வரும்.
கன்னிப் பெண்களே! உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்-. வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக புது சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.
கலைத்துறையினரே! யாதார்த்தமான படைப்பால் எல்லோரின் பாராட்டையும் பெறுவீர்கள். திட்டமிடுதல் மூலம் சாதிக்கும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 5, 6, 8, 17, 23
அதிஷ்ட எண்கள்: 4, 6
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், மயில்நீலம்
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்