Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10,19,28

Advertiesment
ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10,19,28
, செவ்வாய், 31 மே 2016 (18:49 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் இழுபறியான வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். 
 
சொந்தம்-பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சுமுகமாக கையாளுங்கள். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். என்றாலும் தவிர்க்க முடியாத செலவுகள், வேலைச்சுமை, சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும். 
 
அரசியல்வாதிகளே! தலைமையின் கட்டளையை மீர வேண்டாம். கோஷ்டி பூசலில் சிக்காதீர்கள். 
 
கன்னிப் பெண்களே! சமயோஜித புத்தியுடன் நடந்துக் கொள்ளுங்கள். பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். 
 
கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 1, 3, 5, 18, 30
அதிஷ்ட எண்கள்: 3, 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
அதிஷ்ட கிழமைகள்: புதன், சனி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதிசங்கரர் கூறும் பொன்மொழிகள்