9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். வி.ஐ.பிகளின் ஆதரவால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
தோற்றப் பொலிவுக் கூடும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
அரசு காரியங்கள் விரைந்து முடியும். மனைவிவழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். அவர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். என்றாலும் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். சகோதரங்கள் கோபப்படுவார்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். கலைத்துறையினரே! உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். விட்டதைப் பிடிக்கும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 9, 3, 12, 24
அதிஷ்ட எண்கள்: 3, 6
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், மயில் நீலம்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்