Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

Webdunia
சனி, 31 டிசம்பர் 2016 (16:29 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள்,  இந்த மாதத்தில் சோர்வு,  களைப்பு நீங்கி உற்சாகம் பிறக்கும்.

 
குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். ஓரளவு பணம் வரும். பழுதான மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். 
 
விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து தந்தைக்கு நெஞ்சு வலி,  முழங்கால் வலி வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வழக்கால் இருந்த நெருக்கடி நீங்கும். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். தாயாருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். மனைவியுடன் வாக்குவாதம்,  வீண் சந்தேகம்,  மனஇறுக்கம் வந்து நீங்கும். 
 
கன்னிப்பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். கனவுத் தொல்லை,  தூக்கமின்மை வந்து செல்லும். வியாபாரம் சுமாராக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். மேலதிகாரி உதவுவார். 
 
கலைத்துறையினர்களே! போராடி படைப்புகளை வெளியிடுவீர்கள். விட்டுக் கொடுத்துப் போவதால் வெற்றி பெறும் மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 5, 6, 14, 15, 26
அதிஷ்ட எண்கள்: 2, 7
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, வெள்ளை 
அதிஷ்ட கிழமைகள்: புதன், ஞாயிறு
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்