Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

Webdunia
சனி, 31 டிசம்பர் 2016 (16:27 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள்,  இந்த மாததத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

 
பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். பிள்ளைகளால் மரியாதைக் கூடும். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும். பதவிகள் தேடி வரும். 
 
புது வேலைக் கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும். அரசால் அனுகூலம் உண்டு. தாயாரின் உடல் நலம் சீராகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குல தெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். உறவினர்கள்,  நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பழைய சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் கூடுதலாக செலவு செய்து அதை சீர்திருத்தம் செய்வீர்கள். என்றாலும் பேச்சில் அதிகம் கடுமை காட்டாதீர்கள். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். 
 
அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். 
 
கன்னிப்பெண்களே! கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்தி புதிதாக கொள்முதல் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பங்குதாரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டு. 
 
கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகள் வெளிப்படும். புதிய பாதையில் பயணத்தைத் தொடங்கும் மாதமிது. 
      
அதிஷ்ட தேதிகள்: 4, 15, 17, 24
அதிஷ்ட எண்கள்: 1, 9
அதிஷ்ட நிறங்கள்: வெளிர்நீலம், மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், சனி
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்