Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

Webdunia
சனி, 31 டிசம்பர் 2016 (15:49 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு  இந்த மாதம் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.
 
நாடாளுபவர்களின் தொடர்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். மகளுக்கு திருமணம் ஏற்படாகும். புது வீடு,  மனை வாங்குவீர்கள். 
 
உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பவார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். சொந்த&பந்தங்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். விலை உயர்ந்த ஆடியோ,  வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள்-. மனைவியின் உடல் நலம் சீராகும். 
 
பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பால்ய நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து வேலைச்சுமை,  மறைமுக எதிர்ப்பு,  சோர்வு,  சலிப்பு வந்து நீங்கும். 
 
அரசியவாதிகளே! இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள். 
 
கன்னிப் பெண்களே! தேமல்,  முகப்பரு நீங்கும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். லாபம் பெருகும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். உத்யோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். 
 
கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு பரிசு,  பாராட்டு கிடைக்கும். சாதிப்பவர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் மாதமிது.    
 
அதிஷ்ட தேதிகள்: 3, 1, 10, 21, 27
அதிஷ்ட எண்கள்: 4, 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, மெரூண்
அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments