2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதத்தில் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தடைப்பட்ட வேலைகள் முழுமையடையும். கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார். அரசால் அனுகூலம் உண்டு. அரைகுறையாக நின்று போன கட்டிட வேலைகளையெல்லாம் இனி விரைந்து முடிப்பீர்கள். சொத்துச் சேர்க்கையுண்டு. பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். மூத்த சகோதரிக்கு திருமணம் முடியும்.
புதன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். அவர்களிடம் அளவாகப் பழகுவது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் ஆடை, ஆபரணம் சேரும். புது வண்டி வாங்குவீர்கள்.என்றாலும் வீண் விரையம், தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்து செல்லும்.
அரசியல்வாதிகளே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
கன்னிப் பெண்களே! தோற்றப்பொலிவுக் கூடும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பனிப்போர் நீங்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள்.
கலைத்துறையினர்களே! கௌரவிக்கப்படுவீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் மாதமிது.