Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

Advertiesment
ஜனவரி
, வியாழன், 31 டிசம்பர் 2015 (17:05 IST)
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும்.

மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களை தாழ்த்திப் பேசியவர்கள் திருந்துவார்கள். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை செய்வார்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.
 
பழைய வீட்டை இடித்து கட்டுவீர்கள். உறவினர்கள் மெச்சும்படி நடந்து கொள்வீர்கள். புது வண்டி வாங்குவீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். ஃப்ரிட்ஜ், ஏ.சி. போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் செல்வாக்கு உயரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். வேற்றுமொழி, மதத்தினர்கள் உதவுவார்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். சகோதரங்கள் கோபப்பட்டாலும் அனுசரித்துப் போவார்கள். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார்.
 
கன்னிப் பெண்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். காதல் கைக்கூடும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். சில முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை அரசு கௌரவிக்கும். திறமைகளை வெளிப்படுத்தும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 8, 5, 23, 26
அதிஷ்ட எண்கள்: 6, 7
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, சில்வர் கிரே
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

Share this Story:

Follow Webdunia tamil