Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

Advertiesment
ஜனவரி
, வியாழன், 31 டிசம்பர் 2015 (17:03 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் முற்பகுதியில் பணவரவு, வாகன வசதி, ஆடை, ஆபரணம் சேர்க்கை உண்டு.

தோற்றப் பொலிவுக் கூடும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீட்டை விரிவுப்படுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். தடைப்பட்ட திருமணப் பேச்சு வாத்தைக் கைக்கூடும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயல்வீர்கள். என்றாலும் பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் குறித்து கவலைப்படுவீர்கள்.
 
உறவினர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வீண் கோபங்கள் அதிகரிக்கும். பழைய நண்பர் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். திடீர் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். உடன்பிறந்தோர் புரிந்து கொள்ளவில்லையே என அவ்வப்போது வருந்துவீர்கள். அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம்.
 
கன்னிப் பெண்களே! திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பழைய சரக்குகளை தள்ளுபடி விலையில் விற்று தீர்ப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் மாதமிது.
   
அதிஷ்ட தேதிகள்: 7, 6, 16, 20, 24 
அதிஷ்ட எண்கள்: 7, 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், ஊதா
அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

Share this Story:

Follow Webdunia tamil