Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

Advertiesment
ஜனவரி
, வியாழன், 31 டிசம்பர் 2015 (16:59 IST)
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் திடீர் யோகம் உண்டாகும். வழக்கில் வெற்றி உண்டு. உடல் நலம் சீராகும்.

குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். அரசாங்க வேலைகளில் இருந்த இழுபறி நிலை மாறும். வராது என்றிருந்த பணம் வந்து சேரும். பிரபலங்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள்.
 
மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். பிரச்னைகளை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள். செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அவ்வப்போது எதிர்காலம் பற்றிய கவலைகள் அடி மனதில் நிழலாடும். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். பங்காளிப் பிரச்னைகள் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரகள் உதவுவார்கள்.
 
கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபார நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். லாபம் மந்தமாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் அநாவசிய விடுப்புகளை தவிர்க்கவும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினர்களே! புது வாய்ப்புகள் தேடி வரும். தடைகளை தாண்டி தன்னம்பிக்கையுடன் செயல்படும் மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 6, 5, 8, 17, 26  
அதிஷ்ட எண்கள்: 3, 9
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், அடர் நீலம் 
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil