Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

Advertiesment
ஜனவரி
, வியாழன், 31 டிசம்பர் 2015 (16:53 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாததத்தில் சமயோஜித புத்தியால் சவால்களில் வெற்றி அடைவீர்கள்.

வீடு கட்டுவது நல்ல விதத்தில் முடியும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். முற்பகுதியில் திடீர் செலவுகளால் திணறுவீர்கள். முன்கோபம், பேச்சில் கடுமை வேண்டாம். உடன்பிறந்தவர்களை நினைத்து சங்கடப்படுவீர்கள்.
 
சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. தாய்வழியில் அனுசரித்துப் போங்கள். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். என்றாலும் புது தெம்பு பிறக்கும். பழைய உறவினரை சந்திப்பீர்கள். பால்ய நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த வீட்டிலிருந்து வேறு வீடு மாறுவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வார்கள். அரசியல்வாதிகளே! வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போவது நல்லது. கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும். கடின உழைப்பால் நினைத்தது நிறைவேறும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 4, 8, 15, 17, 22
அதிஷ்ட எண்கள்: 1, 5
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், ஊதா
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil