Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

Advertiesment
ஜனவரி
, வியாழன், 31 டிசம்பர் 2015 (16:48 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். தடைகள் நீங்கும்.

எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. முற்பகுதியில் பிள்ளைகளின் உடல் நிலை சற்று பாதிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
 
சில விஷயங்களில் முன்யோசனையில்லாமல் சிக்கிக் கொள்ளாதீர்கள். கரும்பு, சுண்ணாம்புச் சத்துள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வீண் பகை, கவலை, அமைதியின்மை வந்து விலகும். சிலர் புது வீடு மாறுவதற்கு திட்டமிடுவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. உறவினர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தேடி வரும். நட்பு வட்டம் விரியும். கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம்.
 
கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு இதமாக இருக்கும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். புத்துணர்ச்சி ததும்பும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 3, 9, 12, 10, 27 
அதிஷ்ட எண்கள்: 4, 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், சனி

Share this Story:

Follow Webdunia tamil