Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

Advertiesment
ஜனவரி
, வியாழன், 31 டிசம்பர் 2015 (16:44 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் முடிவுக்கு வரும். ஓரளவு பணப்புழக்கம் உண்டு.

பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். நண்பர், உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்களின் புகழ், கௌரவம் உயரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். புதிதாக வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும்.
 
வீட்டில் சுப காரியங்கள் ஏற்பாடாகும். மூத்த சகோதரர் தேவையறிந்து உதவுவார். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். அவ்வப்போது வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள், நெஞ்சு எரிச்சல், செறிமானக் கோளாறு வந்துச் செல்லும். வழக்கில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். இரத்த அழுத்தத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். சொத்து வாங்குவது, விற்பதில் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.
 
கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் பிடிவாதக் குணம் தளரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினர்களே! உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். முயற்சிகளால் முன்னேறும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 1, 9, 12, 21, 18 
அதிஷ்ட எண்கள்: 3, 7
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, ஆரஞ்சு
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

Share this Story:

Follow Webdunia tamil