Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 21 February 2025
webdunia

பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

Advertiesment
பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23
, செவ்வாய், 31 ஜனவரி 2017 (20:16 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் வேலைகளை தொடர்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். தந்தையின் உடல் நலம் சீராகும். பழைய சொந்தம் தேடி வரும். சொத்து சேரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அவ்வப்போது வீண் டென்ஷன், முதுகு, மூட்டு வலி வந்து விலகும். ஆன்மீகவாதிகள், சித்தர்களின் சந்திப்பு உண்டு.

கன்னிப் பெண்களே! காதல் கனியும். பெற்றோரின் ஆசியும் கிட்டும். சிலருக்கு புது வேலையும் அமையும். அரசியல்வாதிகளே! பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிர்கட்சியினரும் மதிப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள்.

உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 5, 6, 8, 15
அதிஷ்ட எண்கள்: 4, 6
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், மயில் நீலம்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், சனி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31