Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

Advertiesment
பிப்ரவரி
, திங்கள், 1 பிப்ரவரி 2016 (16:44 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். உங்களின் முதிர்ச்சியான பேச்சில் அறிவு வெளிப்படும்.

குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களை தாமதமாக புரிந்துக் கொள்வார்கள். பழைய சொத்தை விற்று புது வீடு வாங்குவீ£கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
 
பணவரவு எதிர்பார்த்த வகையில் உண்டு. மகளுக்கு திருமணம் கூடி வரும். உறவினர்கள், நண்பர்களிடம் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து செலவுகள் துரத்தும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம்.
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் உங்களின் போராட்டங்கள் மற்றவர்களுக்கு புரியவில்லையே என வருந்துவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். வீரியத்தை குறைத்துக் கொண்டு காரியத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாதமிது.   
 
    
அதிஷ்ட தேதிகள்: 7, 2, 11, 15, 25 
அதிஷ்ட எண்கள்: 5, 8
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் நீலம், க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil