Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

Advertiesment
பிப்ரவரி
, திங்கள், 1 பிப்ரவரி 2016 (16:47 IST)
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதத்தில் உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள்.

வி.ஐ.பிகளால் ஆதாயம் உண்டு. அரசுக் காரியங்கள் சுலபமாக முடியும். பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கு பயத்தை போக்குவீர்கள். புது வேலை அமையும். சிலர் வேறு ஊர் மாறுவீர்கள்.
 
மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணம், சீமந்தத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள். தள்ளிப் போன வழக்கில் திருப்பம் உண்டாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். சகோதர வகையில் இருந்த பனிப்போர் நீங்கும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.
 
கன்னிப் பெண்களே! புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு புது அதிகாரியால் சில நெருக்கடிகளை நீங்கள் சந்திக்க நேரிடும். கலைத் துறையினர்களே! உங்களின் திறமைகள் வெளிப்படும். புதிய பாதையில் பயணிக்கம் மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 8, 14, 15, 17, 24
அதிஷ்ட எண்கள்: 2, 4
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஊதா
அதிஷ்ட கிழமைகள்: புதன், சனி

Share this Story:

Follow Webdunia tamil