Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

Advertiesment
டிசம்பர்
, திங்கள், 30 நவம்பர் 2015 (17:04 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பழைய நகையை தந்து விட்டு புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். ஆனால் செலவுகள் கூடும். திடீர் பயணங்களும் அதிகரிக்கும்.
 
வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
 
மனஇறுக்கம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். சில நேரங்களில் கை, கால் மரத்துப் போகும். எனவே எளிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. வீடு, சொத்து பத்திரங்களை பாதுகாப்பாக பராமரிப்பது நல்லது. அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள்.
 
கன்னிப் பெண்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். அயல்நாட்டு நிறுவனங்களுடன் புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் சில நேரங்களில் உங்களுடன் ஒத்துழைக்க முரண்டு பிடிப்பார்கள். ஆனால் மூத்த அதிகாரி ஆதரவாக இருப்பார்.
 
கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார். வி.ஐ.பிகளின் ஆதரவால் வெற்றி பெறும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 1, 3, 5, 10, 30 
அதிஷ்ட எண்கள்: 6, 9
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

Share this Story:

Follow Webdunia tamil