Publish Date: Thu, 31 May 2018 (19:55 IST)
Updated Date: Thu, 31 May 2018 (19:56 IST)
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
எந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் எட்டாம் எண் அன்பர்களே நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும்.
இந்த மாதம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள்.
குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு மன குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். பயணங்கள் வெற்றியை தரும். மாணவர்கள் புத்தி சாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும்.
பரிகாரம்: முத்துக்குமரனை வணங்கி வர உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும்.