Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆகஸ்டு மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

Advertiesment
ஆகஸ்டு மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27
, செவ்வாய், 31 ஜூலை 2018 (16:04 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: அடுத்தவர்களை அனுசரித்து சென்று காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் திறமை உடைய ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த வாரம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள்.


மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும்.  பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். பெண்களுக்கு கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரியங்கள் கைகூடும். மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்டு மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26