Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

Advertiesment
ஆன்மிகம்
, சனி, 31 அக்டோபர் 2015 (17:43 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு, இந்த மாதத்தில் புதிய யோசனைகள் பிறக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள்.
 
ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். என்றாலும் சில சமயங்களில் முடிந்துவிடும் என நினைத்த விஷயங்கள் கூட அலைய வைத்து முடியும். வாயு தொந்தரவால் நெஞ்சு வலி, வயிறு உப்புசம், சிறுநீர் பாதையில் அலர்ஜி வரக்கூடும். அரசு காரியங்கள் தள்ளிப் போய் முடியும். அவ்வப்போது வீண் கவலைகள் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோரை அனுசரித்துப் போங்கள். தன்னிச்சையாக எந்த முடிவுகளும் எடுக்க வேண்டாம். வியாபார பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். பழைய அனுபவங்களால் சாதிக்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 9, 1, 3, 6, 12, 21  
அதிஷ்ட எண்கள்: 4, 6
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil