Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

Advertiesment
ஆன்மிகம்
, சனி, 31 அக்டோபர் 2015 (17:42 IST)
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சொத்து சேர்க்கை உண்டு.
 
உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கட்டிட வேலைகளை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
 
பள்ளி, கல்லூரி கால நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். தந்தையுடன் கருத்து மோதல்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள்.
 
கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மேலதிகாரி உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
 
கலைத்துறையினர்களே! வசதி, வாய்ப்புகள் பெருகும். திறமையால் தித்திக்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 8, 23, 24, 26
அதிஷ்ட எண்கள்: 5, 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

Share this Story:

Follow Webdunia tamil