Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

Advertiesment
ஆன்மிகம்
, சனி, 31 அக்டோபர் 2015 (17:39 IST)
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எல்லோரும் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.
 
மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். வேற்றுமொழிக்காரர்கள் நண்பர்களாவார்கள். பதவிகள் தேடி வரும்.
 
உங்களை அவமானப் படுத்தியவரெல்லாம் வலிய வந்து மன்னிப்பு கேட்பார்கள். கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். மாதத்தின் பிற்பகுதியில் தந்தைக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன், செலவுகள் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது.
 
கன்னிப் பெண்களே! கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுவது நல்லது.
 
கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். எதிர்பார்ப்புகளின்றி உழைக்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 6, 8, 13, 17, 26  
அதிஷ்ட எண்கள்: 2, 9
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம் 
அதிஷ்ட கிழமைகள்: சனி, வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil