Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23
, சனி, 31 அக்டோபர் 2015 (17:38 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். மகளின் பிடிவாதம் தளரும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும்.
 
மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இதமாகவும், இங்கிதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். அவ்வப்போது முன்கோபம், உடல் உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி, வேனல் கட்டி வந்துச் செல்லும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய நேரத்தில் செலுத்தப்பாருங்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் கட்சி தலைமையப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள். காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
 
கலைத்துறையினர்களே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். நினைத்திருந்த காரியங்களை செயல்படுத்து மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 1, 14, 15, 17, 23   
அதிஷ்ட எண்கள்: 3, 5
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, கிரே
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

Share this Story:

Follow Webdunia tamil