Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

Advertiesment
ஆன்மிகம்
, சனி, 31 அக்டோபர் 2015 (17:35 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. ஆட்சியாளர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாக திரும்பும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வங்கிக் கடன் கிடைக்கும். மனைவிவழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார்.
 
சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். ஆனால் முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். குடும்பத்திலும் அவ்வப்போது சச்சரவுகள் வரக்கூடும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். கண் எரிச்சல், காது வலி, பல் வலி வந்துப் போகும். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார்.
 
கன்னிப் பெண்களே! திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். உங்கள் கல்வித் தகுதிக் கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் குறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
 
கலைத்துறையினர்களே! உங்களின் கலைத்திறன் வளரும். தொலை நோக்குச் சிந்தனையால் சாதிக்கும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 3, 9, 10, 21, 27 
அதிஷ்ட எண்கள்: 4, 8
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், ஊதா
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil