Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29
, சனி, 31 அக்டோபர் 2015 (17:34 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்கள் கை ஓங்கும். புது வேலை கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். உறவினர் வீட்டு கல்யாணத்தை திறம்பட எடுத்து நடத்துவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்பொழுது உணருவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு.
 
பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். சகோதரங்கள் கோபப்பட்டாலும் நீங்கள் அனுசரித்துப் போவது நல்லது. மாதத்தின் மையப்பகுதியிலிருந்து புதிய கோணத்தில் யோசித்து பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
 
கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். தட்டுத் தடுமாறி முன்னேறும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 2, 7, 11, 15, 20
அதிஷ்ட எண்கள்: 1, 5
அதிஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, மயில் நீலம்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

Share this Story:

Follow Webdunia tamil