Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

Advertiesment
ஆன்மிகம்
, சனி, 31 அக்டோபர் 2015 (17:32 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் யதார்த்தமாகப் பேசிக் கவர்வீர்கள். கார் பழுதை சரி செய்வீர்கள். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சகோதரங்களால் மகிழ்ச்சி கிட்டும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும்.
 
வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். என்றாலும் பிள்ளைகள் கோபப்படுவார்கள். சில நேரங்களில் உங்களை எதிர்த்து வாதாடுவார்கள். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். பிற்பகுதியில் புகழ், கௌரவம் உயரும். பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம்.
 
கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தம் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது.
 
கலைத்துறையினர்களே! சம்பள பாக்கி கைக்கு வரும். கொஞ்சம் அலைந்தாலும் அதற்கான பலனை அடையும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 1, 9, 12, 18, 21 
அதிஷ்ட எண்கள்: 2, 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆலிவ்பச்சை
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

Share this Story:

Follow Webdunia tamil