Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

Advertiesment
ஏப்ரல்
, வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (19:28 IST)
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பேச்சில் இனிமை கூடும். புதிய வேலை கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

கணவன்-மனைவிக்குள் நல்ல உறவு ஏற்படும். கடன் தொல்லைகள் குறையும். பையனுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். தாயின் மனமறிந்து தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
 
உடன்பிறந்தவர்களிடம் நிலவி வந்த பகைமை உணர்வு மாறும். புது நண்பர்களால் ஆதாயம் உண்டு. வாகனச் செலவு குறையும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து வருங்காலத்தைப் பற்றிய கவலைகள், ஏமாற்றம் வரக்கூடும். பயணங்களால் அலைச்சல் உண்டு.  வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். புது மனை வாங்கி வீடு கட்டுவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிரார்த்தனைகள் நிறைவேறும்.
 
கன்னிப்பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டம் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கும். பிற்பகுதியில் முதுகு வலி, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு, சோர்வு, களைப்பு வரக்கூடும்.
 
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். உயரதிகாரிக்கும் நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும். வாக்கு சாதுர்யத்தால் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய மாதமிது.     
 
அதிஷ்ட தேதிகள்: 8, 14, 15, 17, 24
அதிஷ்ட எண்கள்: 1, 4
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், பழுப்பு
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

Share this Story:

Follow Webdunia tamil