Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

Advertiesment
ஏப்ரல்
, வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (19:25 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வற்றிய பணப்பை நிரம்பும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவதால் வீண் சந்தேகம் நீங்கும். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும்.
 
பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் ஆசைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். புதிய ஆடை, அணிகலன்கள் சேரும். பயணங்களால் வெற்றி உண்டு. வீடு, மனை வாங்குவீர்கள். ஆனால் விபத்து, செலவு, ஏமாற்றம், உறவினர் பகை வரக்கூடும். உடன்பிறந்தவர்கள் இனி தக்க சமயத்தில் உதவுவார்கள். தாயின் உடல் நிலை சீராகும்.
 
கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. அரசு அதிகாரிகள் நட்பு கிடைக்கும். ஆனால் சேமிப்புகள் கரையும். அரசியல்வாதிகளே! தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களை திகைக்கும் வகையில் புது யுக்திகளை கையாளப்பாருங்கள்.
 
பழைய பாக்கிகள் விறுவிறுப்பாக வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் அதிரடியான செயல்களை கண்டு அனைவரும் வியப்பார்கள். கலைத்துறையினரே! நீண்ட நாள் கனவு நனவாகும். விடாப்பிடியாக செயல்பட்டு வெற்றி பெறும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 7, 2, 6, 11, 20
அதிஷ்ட எண்கள்: 5, 8
அதிஷ்ட நிறங்கள்: கிரே, வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், ஞாயிறு

Share this Story:

Follow Webdunia tamil