Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

Advertiesment
ஏப்ரல்
, வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (19:17 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் எதிர்பார்த்திருந்த காரியங்கள் கைகூடி வரும். குடும்பத்தாருடன் கலகலப்பாகப் பேசி சிரித்து எவ்வளவு நாட்களாகி விட்டது.

இனி மனம் விட்டுப் பேசுவீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்களை செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்வதில் சுமுகமான நிலை காணப்படும்.
 
அரைகுறையாக நின்று போன வீடு கட்டும் பணியும் முழுமையடையும். ஆனால் கணவன்-மனைவிக்குள் காரசாரமான விவாதங்கள் வந்து நீங்கும். யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். குலதெய்வ கோவிலுக்குச் சென்று வருவதால் மனநிம்மதி கிடைக்கும். என்றாலும் புது வாகனம் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வந்து சேரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.
 
கன்னிப்பெண்களே! தடைபட்ட கல்யாணம் இனி கூடி வரும். பிரபலங்களின் சந்திப்பால் மனநிறைவு கிட்டும். உங்களின் கோபம், அலட்சியப்போக்கு மாறும். சொத்துச் சிக்கல் தீர்வுக்கு வரும். மறைமுக எதிரிக்கு தகுந்த பதிலடி கொடுப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள்.
 
கொடுக்கல், வாங்கலில் நிம்மதி ஏற்படும். உத்யோகத்தில் கொஞ்சம் நிதானமாக செயல்படுவது நல்லது. வேலைபளு அதிகரித்தாலும் மதிப்பு, மரியாதை கூடும். கலைத்துறையினரே! உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். திட்டமிட்டு செயல்படுவதன் வெற்றி பெறும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 5, 6, 8, 17, 14
அதிஷ்ட எண்கள்: 6, 9
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, பிங்க் 
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், சனி

Share this Story:

Follow Webdunia tamil