Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

Advertiesment
ஏப்ரல்
, வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (19:11 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாததத்தில் தன்னம்பிக்கை துளிர்விடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய பிரச்சனைக்கு புது தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.

இனி அமைதியாக மாறும். என்றாலும் மனைவிக்கு கழுத்து, முதுகு வலி வந்து போகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து இனி பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.
 
உடன்பிறந்தவர்களிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். முன்கோபம் நீங்கும். தந்தைவழி உறவினர்களை அனுசரித்துப் போங்கள். நீண்ட நாளாக போக நினைத்துப் போக முடியாமல் போன புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மையப்பகுதியிலிருந்து தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
 
கன்னிப்பெண்களே! காதல் விஷயங்களை ஓரங்கட்டிவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். உறவினர்கள், நண்பர்களுக்கு நீங்கள் நல்லதே நினைத்தாலும் உங்களைப் பற்றி குறை கூறுவார்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் தலைமையைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம்.
 
திடீர் பயணங்களுக்கு குறையிருக்காது. வேற்றுமதத்தினர், மொழியினரால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வேலைபளு அதிகரிக்கும். என்றாலும் சந்தோஷம் நிலைக்கும். கலைத்துறையினரே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 1, 4, 6, 24, 26
அதிஷ்ட எண்கள்: 5, 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

Share this Story:

Follow Webdunia tamil