Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

Advertiesment
ஏப்ரல்
, வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (19:07 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதத்தில் பணவரவு சரளமாக இருக்கும். வாங்கியிருந்த கடனை தந்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த சண்டை சச்சரவுகள் விலகி பரஸ்பரம் புரிந்து கொள்வார்கள்.

மகனுக்கு உங்களின் தகுதிக் கேற்றாற்போல நல்ல சம்பந்தம் அமையும். விசேஷத்தால் வீடு களைகட்டும். அடிக்கடி தொந்தரவு தந்த வாகத்தை மாற்ற இப்போது நேரம் கூடி வரும்.
 
அவ்வப்போது சோம்பல், எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் வந்துபோகும். பயணங்களால் ஆதாயமுண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகளிலிருந்து வில்லங்கம் வரக்கூடும். மூத்த சகோதர வகையில் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வேலை கிடைக்கும்.
 
கன்னிப் பெண்களே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டிற்கு குடிபுகுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து அத்தியாவசிய செலவுகளை மட்டும் இனிமேல் செய்வீர்கள்.
 
வியாபாரத்தில் மற்றவர்களின் அறிவுரையை ஏற்காமல் யோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். பழைய பாக்கிகளை நாசூக்காக வசூலிப்பது நல்லது. உத்யோகத்தில் வீண் விமர்சனங்களை தவிர்த்து பணியில் கவனம் செலுத்தப்பாருங்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். இனிமை பொங்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 3, 1, 9, 10, 21
அதிஷ்ட எண்கள்: 4, 6
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், சில்வர் கிரே
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

Share this Story:

Follow Webdunia tamil