Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

Advertiesment
ஏப்ரல்
, வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (18:52 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் உங்களின் புதுத் திட்டங்கள் யாவும் நிறைவேறும். குடும்பத்தாலும் மகிழ்ச்சி தங்கும். மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். பழைய சொத்தை மாற்றிவிட்டு புது சொத்து வாங்குவீர்கள். வங்கியில் புது கணக்கு தொடங்குவீர்கள்.
 
பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சகோதரவகையில் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும் என்றாலும் அன்புகுறையாது. தாயாரின் உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வழக்குகளில் நல்ல மாற்றம் ஏற்படும். நண்பர்களில் சிலரின் சுயரூபத்தை இப்பொழுதுதான் உணருவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! கல்யாணத் தடைகள் நீங்கும். பெற்றோரின் பேச்சைக் கேட்டு செயல்படத் தொடங்குவீர்கள். அரசியல்வாதிகளே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். சகாக்களுக்கு மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். பழைய வாகனத்தை மாற்ற ஒரு நேரங்காலமும் வரவில்லையே, என அவ்வப்போது எண்ணுவீர்களே, இனி நேரம்கூடி வரும். நவீனரக வாகனத்தில் வலம் வருவீர்கள்.
 
அக்கம்-பக்கம் வீட்டாரிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். சம்பளப் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்தழைப்பு உண்டு. கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொட்ட காரியங்கள் துளிர்க்கும் மாதமிது.
    
அதிஷ்ட தேதிகள்: 1, 3, 5, 10, 18
அதிஷ்ட எண்கள்: 2, 5
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

Share this Story:

Follow Webdunia tamil