ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29

வியாழன், 2 ஏப்ரல் 2020 (17:32 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
கொடுத்த வாக்கிற்கு போல் நடந்து கொள்ளும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் பொருள் வரவும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணமும் வரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். புதியதாக வீடு மனை வாகன சேர்க்கை ஏற்படும்.

செய்தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

எதிர்பார்த்த  உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். பொருளாதாரம் உயரும். எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான  யோகங்கள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.
 
பரிகாரம்: சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28