ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25

திங்கள், 1 ஜூலை 2019 (18:36 IST)
ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் நடுநிலைமையுடன் கையாளும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் பணவரவு திருப்தி தரும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன் தராத முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுவது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உறவினர் நண்பர்களிடம் டென்ஷன் இல்லாமல் போவது நல்லது.

பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் விலகும். அரசியல்துறையினருக்கு செலவு குறையும். மாணவர்களுக்கு எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும்.

பரிகாரம்: நந்தீஸ்வரரை வணங்க எல்லா நலன்களும் உண்டாகும். காரிய அனுகூலம்

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 6, 15, 24