Article Non Veg Recipes %e2%80%8c%e0%ae%ae%e0%af%80%e2%80%8c%e0%ae%a9%e0%af%8d %e0%ae%aa%e0%af%81%e2%80%8c%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81 110011100018_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌மீ‌ன் பு‌ட்டு

Advertiesment
மீன் புட்டு
செ‌ன்னை , திங்கள், 11 ஜனவரி 2010 (11:14 IST)
தேவையான பொரு‌ட்க‌ள்:

மீ‌ன் - 500 ‌கிரா‌ம்
கா‌‌ய்‌ந்த ‌மிளகா‌ய் - 4
வெ‌ங்காய‌ம் - 1
மிளகா‌ய்‌த் தூ‌ள் -3/4 தே‌க்கர‌ண்டி
த‌‌னியா‌த் தூ‌ள் - 3/4 தே‌க்கர‌ண்டி
தே‌ங்கா‌ய் - 3/4 மூடி
க‌றிவே‌ப்‌பிலை - 1 கொ‌த்து
ம‌ஞ்ச‌ள் மு‌ட்டை - 1
எ‌ண்ணெ‌ய் - 1 மேசை‌க்கர‌ண்டி
கடுகு - 1/2 தே‌க்கர‌ண்டி
உளு‌த்த‌ம் பரு‌ப்பு - 1 தேடி‌க்கர‌ண்‌டி
பு‌ளி - ‌சி‌றிதளவு

தயா‌ரி‌க்கு‌ம் முறை : ‌மீனை உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் போ‌ட்டு‌‌க் கொ‌ஞ்சமாக ‌நீ‌ர் ‌வி‌ட்டு பு‌ளியை‌க் கரை‌த்து ‌வி‌ட்டு‌ப் ப‌ற்‌றினா‌ற் போல வேக‌வி‌ட்டு எடு‌க்கவு‌ம்.

வெ‌ங்காய‌த்தை‌ப் பொடி‌ப் பொடியாக வெ‌ட்டவு‌ம். தே‌ங்கா‌யை‌த் துருவவு‌ம். ‌மீனுட‌ன் ‌மிளகா‌ய்‌த் தூ‌ள், த‌‌னியா‌த் தூ‌ள், இவ‌ற்றுட‌ன் மு‌ட்டை சே‌ர்‌த்து ந‌ன்கு ‌‌பிசையவு‌ம். (‌சிறு மு‌ள்கூட இ‌ல்லாத படி எடு‌த்து‌வி‌ட்டு அத‌ன் ‌பி‌ன் ‌பிசையவு‌ம்)

வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ந்தது‌ம் கடுகு, உளு‌த்த‌ம் பரு‌ப்பு போ‌ட்டு வெடி‌த்தது‌ம் கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் ‌கி‌ள்‌ளி‌ப் போ‌ட்டு க‌றிவே‌ப்‌பிலை போ‌‌ட்டு வெ‌ட்டிய வெ‌ங்காய‌ம் போ‌ட்டு வத‌ங்‌கியது‌ம் ‌மீ‌ன் கலவையை‌க் கொ‌ட்டி உ‌திர‌க் ‌கிளறவு‌ம்.

ந‌ன்கு உ‌தி‌ர்‌‌ந்து வ‌ந்தது‌ம் தே‌ங்கா‌ய்‌ப்பூ போ‌ட்டு மேலு‌ம் ச‌ற்று நேர‌ம் ‌கிள‌றி இற‌க்க‌வு‌ம். வா‌ய்வு வகை ‌மீ‌ன் எ‌ன்றா‌ல் இ‌ஞ்‌சி, பூ‌ண்டு பொடிசாக வெ‌ட்டி‌ப் போ‌ட்டு‌க் ‌கிளறவு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil