Publish Date: Fri, 05 Jun 2009 (16:03 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:46 IST)
தேவையான பொருட்கள்
முட்டை 4
குடைமிளகாய் 3
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் 2
தக்காளி - 2
வருத்துப்பொடித்த சீரகம் சோம்பு 1 தேக்கரண்டி
கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
பட்டை சிறிதளவு
சிக்கன் பிரை பொடி 1 தேக்கரண்டி
தக்காளி சாஸ்
கொத்தமல்லி
எண்ணெய்
உப்பு
செய்யும் முறை
முட்டையை வேக வைத்து தோல் நீக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்
பட்டை போட்டு வாசம் வந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு
வதக்கவும்.
சற்று வதங்கியது குடைமிளகாயை போடவும் பின் உப்பு, மசாலாப் பொருட்களைப் போட்டு வதக்கவும்.
தீயை குறைத்து வைக்கவும் அதனுடன் தக்காளி சாஸை சேர்த்து பின்
முட்டையை இரண்டாகவோ இல்லை அப்படியோ சேர்த்து மெதுவாக கிளரவும்.
அழகிய நிறத்துடன் வரும்போது பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி
கொத்துமல்லியும் நருக்கி அதன்மேல் போட்டு சிறிது நேரம் மூடிவைத்து பின்பு பரிமாறவும்
இது எதனுடன் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.