தேவையானவை
அரிசி - ஆழாக்கு
முட்டை - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க - எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை
செய்யும் முறை
அரிசியை சிறிது உப்பு சேர்த்து முக்கால் வேக்காடாக வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் உப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள் போட்டு சில துளி தண்ணீர் ஊற்றிக் கரைத்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலைப் போட்டுத் தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் முட்டையை ஊற்றிக் கிளறவும். பாதி வெந்ததும் வடித்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு 5 நிமிடம் கிளறி இறக்கவும்.
சூடான முட்டை சாதம் தயார்.