முட்டை மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் :
முட்டை 4
இஞ்சி சிறு துண்டு
பூண்டு 6
கிராம்பு 6
மிளகு 1/2 டீஸ்பூன்
வெங்காயம் 2 ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 2 ( பொடியாக நறுக்கியது )
மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை தேவையான அளவு
எலுமிச்சம்பழம் அலங்கரிக்க
உப்பு தேவையான அளவு
செய்முறை :
வேக வைத்த 4 முட்டைகளை துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, கிராம்பு, மிளகு முதலியவைகளை அரைத்துக் கொள்ளவும்.
எண்ணையில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, அத்துடன் தக்காளி உப்பு, மிளகாய்த்தூள், அரைத்த மசாலாக்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
5 அல்லது 6 நிமிடம் வதங்கியவுடன் முட்டை துண்டுகளை சேர்த்து கறிவேப்பிலை மற்றும் எலுமிச்சமிச்சம்பழ துண்டுகளுடன் அலங்கரிக்கவும்.