மீனை குழம்பு, வறுவல் என விதவிதமாக சமைத்திருப்பீர்கள். ஆனால் மீனில் வடை செய்திருக்கிறீர்களா? இல்லையா... இதோ உங்களுக்கான செய்முறை...
என்ன தேவை?
மீன் துண்டுகளாக - 500 கிராம்
முட்டை - 1
உருளைக்கிழங்கு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 3
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படி செய்வது?
மீனைச் சிறிது நீர்விட்டு வேகவைத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும்.
மீன், உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
எண்ணெயைக் காய வைத்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு இருபுறமும், சிவந்ததும் எடுக்கவும்.
ருசியான மீன் வடை தயார்.
உருளைக்கிழங்கிற்குப் பதிலாக இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு கலந்தும் மீன் வடை செய்யலாம்.