Article Non Veg Recipes %e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d %e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%af%86%e0%ae%9f%e0%af%8d 109101200038_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீன் கட்லெட்

Advertiesment
மீன் கட்லெட்
, திங்கள், 12 அக்டோபர் 2009 (13:48 IST)
மீ‌ன் க‌ட்லெ‌ட் ‌மிகவு‌ம் சுவையான உணவாகு‌ம்.

தேவையான பொருட்கள்:
மீன் : 500 கிராம்
ரொட்டி : 2 ஸ்லைஸ்
எலுமிச்சம்பழம் : 1/4
பச்சை மிளகாய் : 5 கிராம்
வெங்காயம் : 200 கிராம்
முட்டை : 1
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : வறுக்க தேவையான அளவு
வெள்ளரிக்காய் : 30 கிராம்
தக்காளி : 50 கிராம்
கருவேப்பிலை : கொஞ்சம்

செய்முறை:

மீனை நன்றாக அலம்பி சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பிரட் ஸ்லைஸை தண்ணீரில் முக்கி எடுத்து, நன்கு பிழிந்து கொள்ளவும். பிழிந்து வைத்திருக்கும் பிரட்டுடன் வெங்காயம், பச்சை மிளகாய், வெந்த மீன், எலுமிச்சை சாறு முதலியவைகளை ஒன்றாக சேர்த்து, உப்பு போட்டு தேவையான வடிவில் செய்து கொள்ளவும்.

கட்லெட்டை அடித்து வைத்திருக்கும் முட்டையில் முக்கி, பிரட் தூளில் பிரட்டி எடுத்து தோசை கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு இரு பக்கமும் நன்கு வறுபட்டவுடன் இறக்கவும்.

வறுபட்ட கட்லெட்டை வட்டமாக சீவிய வெள்ளரிக்காய், தக்காளியுடன், கறிவேப்பிலையும் வைத்து அலங்கரிக்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil