ஆஸ்துமா உள்ளவர்களுக்கு நண்டு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
நண்டு - 4
பூண்டு - முழுதாக 1
கசகசா - அரை தேக்கரண்டி
மிளகு - 4 தேக்கரண்டி
தேவைக்கேற்ப உப்பு
தேங்காய் - பாதி மூடி
சின்ன வெங்காயம் - 5
ப மிளகாய் அல்லது கா மிளகாய் - 5
சோம்பு, சீரகம் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை
ஒரு வாணலியில் சிறிது அளவு எண்ணெய் ஊற்றி துருவிய தேங்காய், கசகசா, சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
வறுத்த மசாலாவுடன் பூண்டு, மஞ்சள் சேர்த்து அறைத்து வைத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
அதில் சுத்தம் செய்த நண்டுகளை சேர்த்து, அவை நிறம் மாறும் வரை வதக்கவும்.
அறைத்த மசாலாவை இத்துடன் சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
நண்டு வறுவல் தயார்.