தேவையானவை
ஆட்டுக்கறி - கால் கிலோ
கடலைப் பருப்பு - அரைகிலோ
இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் பொடி, தனியா பொடி - தலா 1 தேக்கரண்டி
மஞ்சள் - 2 சிட்டிகை
உப்பு
முட்டை - 1
மசித்த சாதம் - ஒரு கைப்பிடி
எண்ணெய் - 2 கப்
செய்யும் முறை
பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கழுவி குக்கரில் போடவும். அதில் எலும்பில்லாத கறித் துண்டுகளை போட்டு தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
5 விசில் வைத்து வெந்ததும் தண்ணீர் மீதமில்லாமல் இருக்கும் வகையில் தண்ணீர் வைக்கவும்.
வெந்த பருப்பு, கறியை மிக்சியில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மசாலாப் பொடிகளை சேர்த்து லேசாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி அக்கவும். அதில் அரைத்த விழுதையும், மசித்த சாப்பாட்டையும் சேர்க்கவும்.
இதனை வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
விழுது தளர்த்தியாக இருந்தால் ரொட்டித் தூளில் பிரட்டிக் கொள்ளலாம். கவலை வேண்டாம்.