தேவையான பொருட்கள் :
ஆட்டுக் கறி - 400 கிராம்
வெங்காயம் - 2
பால் - 200 மி.லி
மைதா மாவு - 1 மேசைக் கரண்டி
வெண்ணெய் - 30 கிராம்
உப்பு, மிளகுத் தூள் - தேவையான அளவு
தயாரிக்கும் முறை: கறியை நன்கு கொத்திக் கொள்ளவும். வெங்காயத்தோடு சேர்த்துக் கறியை வேகவிடவும். உப்புப் போடவும். நன்றாக வெந்ததும் மசித்து பெரிய சல்லடையில், போட்டுக் கரண்டியால் தேய்த்து எடுக்கவும்.
வெண்ணெயைப் பாத்திரத்தில் போட்டு உருகியதும் மாவு கலந்து கிளறி பாலை ஊற்றிக் கொதிக்க விட்டு இந்தக் கறிச்சாறுடன் சேர்த்துக் கலந்து மிளகுத் தூள் தூவிப் பரிமாறவும்.
இதனுடன் ’’கீரிம்'' கலந்து கொள்வது உண்டு. கடைகளில் கேட்டால் கிரீம் கிடைக்கும். நல்ல காளான்களை வேகவிட்டு மசித்தும் சேர்ப்பதும் உண்டு. மைதா மாவு கலப்பதற்குப் பதிலாக ஒரு முட்டையை உடைத்து ஊற்றி வேகமாகக் கிளறிக் கலப்பதும் உண்டு.