தேவையான பொருட்கள் :
கறி - 100 கிராம்
மிளகு - 10 கிராம்
சீரகம் - 2 ½ கிராம்
உப்பு - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 25 கிராம்
தயாரிக்கும் முறை :
கறியை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, மிளகு, சீரகம் இவைகளை போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வேக விடவும்.
கறி நன்றாக வெந்த பின் கறியில் தண்ணீர் அதிகமாக இருந்தால் திறந்து வைத்து நீர் சுண்டும் படியும் ஆனால் கறி அடிப்பிடித்து விடாதபடியும் கவனித்து, நீர் சுண்டியவுடன் பாத்திரத்தை இறக்கிக் கீழே வைத்து ஆறவிடவும்.
வெந்தக் கறியை மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து மைபோல ஆரைத்து எடுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு நன்றாகக் காய்ந்த பின் அரைத்த கறியை எடுத்து, சிறிய உருண்டைகளாக உருட்டி அதை வடைபோல தட்டி எண்ணெயில் போட்டு சிவக்கப் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.