Article Non Veg Recipes %e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf %e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d 109101600015_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கறி சாம்பார்

Advertiesment
கறி சாம்பார்
, வெள்ளி, 16 அக்டோபர் 2009 (11:06 IST)
ஆட்டுக் கறி போட்டு சாம்பார் வைக்கும் முறை பலருக்கும் தெரியாது..

தேவையானவை

துவரம் பருப்பு - கால் கிலோ
ஆட்டுக்கறி - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
பூண்டு - 10 பல்லு
எண்ணெய், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் - தாளிக்க

செய்யும் முறை

பருப்பையும், கறியையும் தனித்தனியாக நன்கு கழுவி குக்கரில் போடவும். 4 விசில் வைத்து இறக்கி அதில் நறுக்கிய 1வெங்காயம், 2 தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து மீண்டும் 2 விசில் வைத்து இறக்கவும்.

பருப்பை கடைய வேண்டிய அவசியமில்லாமல் நன்கு குழைந்து இருக்கும்.

புளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.

பின்னர் கரைத்த புளியை ஊற்றி கொதிக்க விடவும். கடைசியாக வேகவைத்த பருப்பு, கறியைக் கொட்டி இறக்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil