Publish Date: Sun, 11 Jan 2009 (16:49 IST)
Updated Date: Sun, 11 Jan 2009 (16:48 IST)
குழந்தைகளுக்கும், வயதில் முதிர்ந்த பெரியவர்களுக்கும் எலும்பில்லாத கறியை வாங்கி வந்து சாப்ஸ் செய்து கொடுக்கலாம். இது அவர்களுக்கு பிடித்தமானதாகவும், உண்ண எளிதாகவும் இருக்கும்.
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
எலும்பில்லாத கறி - 500 கிராம்
மிளகு - ஒரு கைப்பிடி
பட்டை - சிறிதளவு
கிராம்பு - சிறிதளவு
நெய் - ஒரு குழிக்கரண்டி
செய்முறை:
முதலில் கறியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மிளகு, பட்டை, கிராம்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதனை கறியுடன் சேர்த்து கிளறி சுமார் அரை மணி நேரம் அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். இதனால் மசாலா கறியில் நன்கு ஊறி இருக்கும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய்யை விட்டு நன்றாகக் காய்ந்தவுடன் மசாலாவுடன் ஊறி இருக்கும் கறியை எடுத்து அதில் போட்டு வேக விடவும்.
அவ்வப்போது அடிபிடிக்காத வண்ணம் கறியை கிளறிக் கொண்டே இருக்கவும்.
கறி வெந்ததும் இறக்கி கொத்துமல்லி, கறிவேப்பிலை தழைகளைத் தூவி பரிமாறவும்