தேவையான பொருட்கள் :
இறால் 500 கிராம்
சாம்பார் வெங்காயம் 250 கிராம்
(பொடியாக நறுக்கியது)
பூண்டு 250 கிராம்
தக்காளி 250 கிராம்
(பொடியாக நறுக்கியது)
சோம்பு 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி 5 டீஸ்பூன்
எண்ணெய் 100 கிராம்
உப்பு தேவைகேற்ப
செய்முறை :
கடாயை அடுப்பில் வைக்கவும். எண்ணெயை ஊற்றி, அதில் சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு நன்கு வதக்கவும். நன்கு வதங்கியபின், சுத்தம் செய்யப்பட்ட இறாலையும் ,உப்பு, மஞ்சள் பொடியையும் போட்டு நன்கு கிளறவும். கிளறியபின், தக்காளி, மிளகாய்த்தூளை போட்டு, நன்கு கிளறி மூடி வைக்கவும். நன்கு வறுபட்டப்பின் இறக்கி பரிமாறவும்.