Publish Date: Fri, 22 Jan 2010 (14:28 IST)
Updated Date: Fri, 22 Jan 2010 (14:27 IST)
தேவையான பொருட்கள் :
இறால் - 500 கிராம்
கடலை மாவு - 200 மி.லி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
தயாரிக்கும் முறை :
இறாலை தோல் உரித்து நன்கு அலசி வைக்கவும்.
இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பஜ்ஜி மாவு போலக் கரைத்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு இறாலாக இந்த மாவில் முக்கி எடுத்துக் காய்ந்த எண்ணெயில் போட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும்.